இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை, தாம் சிம்பொனி எழுதச் சொன்னதாக வெளியான தகவலை இளையராஜா மறுத்துள்ளார்.
சிம்பொனி எழுத இளையராஜா தன்னை ஊக்கப்படுத்தியதாக அண்மையில் கூறியிருந்தார் லிடியன்.
இந்நிலையில், “லிடியன் நாதஸ்வரம், சிம்பொனிக்காக தாம் உருவாக்கிய இசைக்கோர்வையை என்னிடம் போட்டு காண்பித்தார். இது சிம்பொனி போல் இல்லை என்றும் சினிமா பாடல்போல் உள்ளது என்றும் என் கருத்தைக் கூறினேன்.
“மேலும், சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு அதை முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
“லிடியன் என்னுடைய ஒப்புதல், அங்கீகாரத்திற்காக வந்தார். என்னை யாரும் முன்மாதிரியாகக் கருத வேண்டாம்,” என்று இளையராஜா மேலும் கூறியுள்ளார்.