இளையராஜாவின் இசையில் கவிஞர் கண்ணதாசன் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான பாடல் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கலைமானே கன்னி மயிலென’ பாடல். இதுபற்றி ஊடகமொன்றில் பேசிய இளையராஜா “அந்த பாடலை எழுதி முடித்தபின் அருகில் இருந்த அவரின் உதவியாளரிடம் கண்ணதாசன் ‘இளையராஜா அதிர்ஷ்டக்காரர்’,” எனச் சொன்னதாக அவர் தெரிவித்தார்.
“‘ஏன் அப்படி சொல்கிறீர்கள்?’ என உதவியாளர் கேட்டதற்கு இதுதான் நான் தமிழ் திரைப்படங்களுக்கு எழுதும் கடைசிப்பாடல். இனிமேல் நான் பாடல்கள் எழுத மாட்டேன். அதனால்தான் அப்படி சொன்னேன்,”எனக் கண்ணதாசன் தெரிவித்ததாக இளையராஜா கூறினார்.
மேலும், அப்படி கூறிவிட்டு, அமெரிக்காவிற்கு சிகிச்சைக்குச் சென்ற கண்ணதாசன் அவர்களின் உடல் மட்டுமே சென்னைக்குத் திரும்பியதாக இளையராஜா மிகவும் மன வருத்தத்துடன் சொன்னார்.

