இங்கிலாந்தில் தாம் இசை அமைத்த சிம்பொனி இசையை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் இளையராஜா (படம்). இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“இங்கிலாந்தில் பதிவு செய்த சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியிட உள்ளேன். இதை தீபாவளித் திருநாளன்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.
1,500 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏற்கெனவே ஒரு சிம்பொனி இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
இளையராஜாவின் புது அறிவிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.