இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் அதற்கு முன்பாக பூசை அறைக்குச் சென்று ஓரிரு நிமிடங்கள் கண்மூடி பிரார்த்தனையில் ஈடுபடுவார்.
பூசை அறைக்குப் பக்கத்திலேயே உள்ள சுவரில் ராஜாவும் அவரது தாயாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. அதில் சிரித்தபடியே காட்சிதரும் தன் தாயாரைப் பார்த்து, ‘அம்மா நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்புவாராம்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்தத் தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது தாயார் மறைந்தது முதல் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
“இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது உண்மை. அதில் என் தாயார் சிரித்தபடி காட்சியளிப்பதும் உண்மை. அப்படியானால் இந்தப் படத்தில் அவர் உயிருடன் இருப்பதும் உண்மைதானே,” என்கிறார் இளையராஜா.

