தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா தரப்பில் நீதிமன்ற அவமதிப்புக் கடிதம்

1 mins read
b3eec7e0-81c3-44b7-98a2-19a472a871ac
‘குட் பேட் அக்லி’ அஜித். - படம்: ஊடகம்

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் அஜித் நாயகனாக நடித்த ‘குட் பேட் அக்லி’. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது.

‘குட் பேட் அக்லி’ உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ‘ரீமிக்ஸ்’ பதிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமது மூன்று திரைப்படப் பாடல்கள் அந்தப் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிபதி இடைக்காலத் தடை விதித்து இருந்தார்.

ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி ‘குட் பேட் அக்லி’ படத்தில் தொடர்ந்து தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தற்போது இளையராஜா தரப்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“பாடல்கள் பயன்படுத்துவதை நிறுத்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும்,” என அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இன்னும் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்