நான் திரும்பி வந்துவிட்டேன்: ஷ்ருதிஹாசன்

1 mins read
514bab62-c673-4f84-baf7-b039d6e7f351
ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

மீண்டும் இன்ஸ்டகிராம் பக்கத்துக்குத் திரும்பியுள்ளார் நடிகை ஷ்ருதிஹாசன். இத்தகவலை தனது பக்கத்தில் உற்சாகத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தேதியில் இன்ஸ்டகிராம் தளத்தைப் பயன்படுத்தாத திரையுலகத்தினரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

குறிப்பாக, நடிகைகள் இன்ஸ்டகிராம் இன்றி ஒரு நாள்கூட இருப்பதில்லை. அந்த வகையில், ஷ்ருதிஹாசன் இன்ஸ்டாவில் தீவிரமாக இயங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் யாரோ ஊடுருவி, அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தனது பக்கம் முடக்கப்பட்டதாக அறிவித்தார் ஷ்ருதி.

இதையடுத்து, சில நாள்களுக்குப் பின்னர், அவரது இன்ஸ்டகிராம் பக்கம் மீட்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த ஷ்ருதி, அத்தகவலை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பல்வேறு பதிவுகளை இன்ஸ்டகிராமில் வெளியிட்டபடி உள்ளார்.

‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று ரஜினி ஸ்டைலில் இடம்பெற்றுள்ள ஷ்ருதியின் பதிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்