இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார் இமான். இவரது 13 ஆண்டுகால மண வாழ்க்கை கடந்த 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இமானுக்கு முதல் மனைவி மூலம் இரண்டு மகள்கள் உள்ளனர்.
விவாகரத்துக்குப் பின் மறுமணம் செய்துகொண்டார் இமான். இதனிடையே, பார்வையற்ற ஒரு தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவர்களது இரண்டாவது பெண் குழந்தையை வளர்க்கச் சிரமப்பட்டனர்.
இத்தகவலை அறிந்த இமான், அப்பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்.