தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு படத்திலாவது எங்களை இணைய விடுங்கள்: விக்ரம்

1 mins read
ae2233b9-4984-44f7-a7b0-75d51648ea90
நடிகர் விக்ரம், நடிகை ஐஸ்வர்யா ராய். - படம்: ஊடகம்

என்னையும் ஐஸ்வர்யா ராயையும் ஒரு படத்திலாவது இணைய விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விக்ரம்.

‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து நடித்து வருபவர் விக்ரம்.

முதல் படத்திலிருந்து இன்று வரை அவரது இந்தத் தேடலும், அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. சினிமாவை அவ்வளவு தூரம் நேசிப்பவர். தற்போது அவர் ‘தங்கலான்’ படத்திலும் அப்படிப்பட்ட அர்ப்பணிப்பையே செலுத்தி நடிப்பால் அசர வைத்திருக்கிறார்.

இந்நிலையில் பாலிவுட்டில் சித்தார்த் கண்ணன் என்பவரின் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சினிமா தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது அவரிடம் ‘ராவணன்’, ‘ பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் உடனான அவரது நட்பு குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த விக்ரம், “ஐஸ்வர்யா மிகவும் உறுதியானவர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அபிஷேக்கும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்தான். ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் திரையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆனால் நாங்கள் நடித்த இரண்டு படத்திலும் இணைய மாட்டோம்.

நான் மணி ரத்னத்திடம் சொன்னேன். தயவு செய்து ஒரு படத்திலாவது ரசிகர்களுக்காக எங்களை ஒன்று சேர வையுங்கள் என்று. ஐஸ்வர்யா ஓர் அற்புதமான நடிகை. அவருடன் பணிபுரிவது எளிமையாக இருக்கும்,” என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்