‘ராமாயணம்’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதால் சாய் பல்லவி அசைவ உணவுகளை அறவே தொடுவதில்லை என்றும் வெளியூர் படப்பிடிப்பு என்றால் சமையல் கலைஞர்களையும் உடன் அழைத்துச் செல்வதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
ஆனால் இவை கட்டுக்கதைகள் என்றும் தன்னைப் பற்றி இதுபோன்று பொய் தகவல் பரப்பும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாய் பல்லவி கூறியுள்ளார்.
“ஒவ்வொரு முறையும் இதுபோன்ற அடிப்படை, ஆதாரமற்ற, புனையப்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது மௌனம் காத்து வந்தேன். இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. எனது படங்களின் வெளியீட்டின்போது, புதுப்பட அறிவிப்பின்போது இவ்வாறான தகவல்கள் வெளியானால் சட்டப்படி நட வடிக்கை எடுப்பேன்,” என்று சாய் பல்லவி காட்டத்துடன் கூறியுள்ளார்.