தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் வாழ்வில் இந்தியாவுக்கு முக்கியமான இடமுண்டு: ஜெரோம்

1 mins read
dbb883ad-0994-4e7f-8494-3fbba620c183
ஜெரோம் ஃபிளைன். - படம்: ஊடகம்

தமது வாழ்க்கையில் இந்தியாவுக்கு மிக முக்கியமான இடமுண்டு என்கிறார் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃபிளைன்.

தனது இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணமாக சென்று திரும்பியுள்ளாராம்.

அந்தப் பயணமும் அதன் மூலம் கிடைத்த அனுபவமும் தனது வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் அதன் பிறகுதான் கலை உலக வாழ்க்கையைத் தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார் ஜெரோம்.

இவர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘ஜான் விக்: சாப்டர் 3’ உட்பட பல படங்கள், இணையத்தொடர்களில் நடித்திருக்கிறார்.

ஹாலிவுட்டை நோக்கி இந்திய திரையுலகத்தினர் படையெடுத்த காலம் மறைந்து, தற்போது ஹாலிவுட் கலைஞர்கள் பலர் இந்தியத் திரையுலகில் சாதிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘தங்கலான்’ படத்தில் டேனியல் கால்டிகிரோன், மோகன்லால் நடித்து வரும் ‘எல்2: எம்புரான்’ படத்தில் ஜெரோம் ஃப்ளைன் நடித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்