இந்தியாவின் பல மொழிகளில் பணக்கார தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் தமிழ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
இந்திய சினிமா என்பது பல கோடி வர்த்தகம் புழங்கும் முக்கியமான வணிகத்தளம் என்றும் கூறலாம். சொத்து மதிப்பின் அடிப்படையில் திரையுலகைச் சேர்ந்த கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, சஞ்சய் லீலா பன்சாலி, எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர்.
கலாநிதி மாறன் ரூ.33 ஆயிரம் கோடி சொத்துக்கு உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷாருக்கான், அமிதாப் பச்சனைவிட அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.
சன் குழுமத்தின் தலைவராக உள்ள கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ.33,400 கோடி என ஹூருன் இந்தியா (hurun india) அமைப்பு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான பணக்காரர்களுக்கான பட்டியலில் இதனை ஹூருன் இந்தியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.