தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுமையின் மறுஉருவம்தான் இந்து ரெபேக்கா: நன்றி தெரிவிக்கும் பதிவில் ‘அமரன்’ பட இயக்குநர் உருக்கம்

1 mins read
29218303-b8d3-4b49-9f33-0db3f95ecbc5
ராஜ்குமார் பெரியசாமி, இந்து ரெபேக்கா வர்கீஸ். - படம்: ஊடகம்

இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி, சில திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில், முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீசுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

அதில், ‘ஆளுமையின் மறு உருவம்தான் இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் எடுத்த அனைத்து முடிவுகளுக்காகவும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுக்க அனுமதித்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.

“மேஜர் முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் ‘அமரன்’ திரைப்படம்,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

குறிப்புச் சொற்கள்