அஜித் தற்போது நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் எனத் தெரிய வந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்த கையோடு, ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார் அஜித். அதற்கான பயிற்சி விரைவில் தொடங்க உள்ளதாம்.
எனவேதான் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளாராம்.
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து திரைகாண உள்ளன.