பெண் போராளியாக இனியா

பெண் போராளியாக இனியா

படம்: கேரளா9லைவ்

20 Nov 2026 - 5:50 pm

1 mins read

தமிழ்த் திரையுலகில் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை இனியா.

தற்போது அவர் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பெண்களின் உரிமைகளையும் ஒரு பெண் போராளியின் உணர்வுபூர்வமான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் அப்படத்துக்கு ‘வன்னி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ், சுக்கிரன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தை, எஸ்.ஏ. கார்த்திகேயன் இயக்குகிறார்.

தயாரிப்பு, இயக்கம் என இரட்டைப் பொறுப்புகளை ஏற்றுள்ள அவர், சமூகத்துக்குத் தேவையான முக்கியமான கருத்தை இப்படத்தின் மூலம் பதிவுசெய்யப் போவதாகக் கூறுகிறார்.

இதில் இனியாவுடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதைக்கு உயிர்கொடுக்கும் வகையில், வாகீசன் ராசைய்யா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதைக்களத்துக்கு ஏற்ப படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கமான வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் பெண்ணுரிமை, பெண் போராளியின் வாழ்வியல் போராட்டத்தை எதார்த்தமாகப் பேச இருக்கிறது ‘வன்னி’ திரைப்படம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்