பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாவ்ஜி’. அப்படத்தை இயக்குநர் ஹனுராகவ புடி இயக்குகிறார். அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் இமான்வி நடிக்கிறார்.
சமூக ஊடகமான ‘இன்ஸ்டகிராம்’ மூலம் பிரபலமான இமான்வியை அப்படத்தில் நாயகியாக்கியது குறித்து ஹனுராகவ விளக்கம் அளித்துள்ளார்.
“இமான்வியின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, அவரது கண்கள் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவை. நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என எண்ணிய காரணத்தால் அவரைத் தேர்வுசெய்தேன்,” என ‘பாவ்ஜி’ படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
“மேலும், முன்புபோல இயக்குநர்கள் தங்கள் கதைக்கான நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்வதில் சிரமம் இருப்பதில்லை. சமூக ஊடகம் மூலம் பலரும் தங்கள் திறமைகளைப் போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்துகின்றனர். அவர்களில் நமக்குப் பிடித்தமானவர்களைத் தேர்வுசெய்து பெரிய திரையில் நடிப்பதற்கு வாய்ப்பளிக்கலாம்,” என ஹனுராகவ தெரிவித்துள்ளார்.

