ஆதி சங்கரரின் இளம் பருவத்தை மையமாக வைத்து இணையத்தொடர்

1 mins read
bc8d7193-5d76-47b2-a104-cc29051a8683
‘ஆதி சங்கரர்’ இணையத் தொடரில் இடம்பெறும் காட்சி. - படம்: ஊடகம்

ஆதி சங்கரரின் இளம் பருவத்தை மையமாக வைத்து இணையத்தொடர் ஒன்று உருவாகிறது. இதை ஓங்கார் நாத் மிஸ்ரா இயக்குகிறார்.

ஆதி சங்கரர் வேடத்தில் அனவ் காஞ்யோ நடிக்க, பாபி பட்டாச்சார்யா இசையமைக்கிறார். பெங்களூரு, மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

“72 மத குழுக்களாகவும் 300க்கும் மேற்பட்ட மாநிலங்களாகவும் பிரிந்துகிடந்த இந்தியாவை இணைக்க ஆதி சங்கரர் எவ்வாறு உதவினார் என்பதை இத்தொடர் விரிவாக விளக்கும்,” என்கிறார் இயக்குநர் ஓங்கார் நாத்.

குறிப்புச் சொற்கள்