சிம்புவின் அடுத்த படத்திற்கு தடங்கல்

1 mins read
48943064-f827-4254-b61b-a6a2c5c6f383
சிம்பு. - படம்: ஊடகம்

சிம்பு தற்பொழுது ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையைத் தீர்த்தால்தான் அவரின் ‘STR 48’ படத்தைத் தொடங்கமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.

அதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஒரு சில பிரச்சினைகளை சிம்பு முடிக்கவேண்டும் என்கிறார்கள் திரையுலகினர்.

ஏனெனில், வேல்ஸ் நிறுவனம் சிம்புவின்மீது புகார் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி சிம்புவின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

‘தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் எந்தவித பிரச்சினையுமின்றி விட்டுவிட்டார்கள். ஆனால், புதிய படம் தொடங்கும் முன்பு வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையை முடித்தாக வேண்டும்.

பிரச்சினையைத் தீர்ப்பாரா? படத்தில் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசிம்பு