தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது: சிவகார்த்திகேயன்

தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது: சிவகார்த்திகேயன்

2 mins read
c2e6e4da-687f-48e4-a657-a6ae5ae1b16c
நடிகர் சிவகார்த்திகேயன். - படம்: விகடன்
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னையில் ‘அக்‌ஷயா தங்க மாளிகை’ நகைக் கடையின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

முன்னதாக, இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் நடித்து வந்த அவரிடம், நகை வாங்குவதில் உங்களது விருப்பம் என்னவென்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “நான் எனக்காகத் தங்கத்தைத் தேர்வு செய்ததே இல்லை, மனைவியான ஆர்த்திதான் தேர்வு செய்வார்.

“கல்யாணத்தின்போது மோதிரம் வாங்க மட்டும்தான் என்னிடம் பணம் இருந்தது; அதனால், ஆர்த்திக்கு முதன்முதலில் மோதிரம் வாங்கிக் கொடுத்தேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மனைவியுடன் நகைக் கடைக்குச் சென்றால், குறைந்தது இரண்டு மணி நேரம் பார்த்துவிட்டு இறுதியில் முதலில் பார்த்ததையே தேர்ந்தெடுப்பார்,” என்றார்.

அத்துடன், “கால்கடுக்க நிற்கக்கூடிய, பாதிக்கப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன்,” என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

“ஒரு நாட்டினுடைய பொருளியல் மதிப்பே அதன் தங்க இருப்பை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது,” என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, “அப்படியிருக்கும்போது, தனிநபர் ஒவ்வொருவருக்கும் தங்கம் மிகப்பெரிய மதிப்பையும் பாதுகாப்பையும் தருகிறது என்றுதான் நினைக்கிறேன்,” என்றார் சிவகார்த்திகேயன்.

“தங்கத்தில் முதலீடு செய்வது என்பது காலப்போக்கில் அதன் மதிப்பைக் கூட்டும் ஒரு நல்ல விஷயம்,” என்று அவர் கூறினார்.

“அது நமக்கு ஒரு கூடுதல் மதிப்பைத் தருவதோடு, ஒரு நல்ல பொருளை வாங்கியிருக்கிறோம் என்கிற மனநிறைவையும் கொடுக்கிறது,” என்றார்.

மேலும், “விலையுயர்ந்த கைப்பேசியையோ, பிற ஆடம்பரப் பொருள்களையோ வாங்குவதைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது நமக்கும் பயன்படும்,” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

“தங்கத்தில் முதலீடு செய்வது நமது அடுத்த தலைமுறைக்கும் உறுதுணையாக இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்