திரையுலகில் அறிமுகமான புதிதில், இயக்குநர் ஒருவர் தம்மிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார் ஷாலினி பாண்டே.
தெலுங்கில் அறிமுகமான இவர், பல தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தாம் எதிர்கொண்ட பாலியல் தொல்லைக்குப் பிறகு திரைத்துறையில் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அப்போது எனக்கு ஏறக்குறைய 22 வயதுதான் இருக்கும். தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் இயக்குநர் வேண்டுமென்றே அத்துமீறி எனது கேரவனுக்குள் நுழைந்தார்.
“அப்போது நான் உடை மாற்றிக்கொண்டிருந்தேன். அவரைக் கண்ட அதிர்ச்சியில் என்ன செய்வதென்று முதலில் தெரியவில்லை. பிறகு கோபத்துடன் வெளியே செல்லுமாறு உரக்கச் சொன்னேன்.
“அந்த கசப்பான அனுபவத்தை இதுவரை மறக்க முடியவில்லை,” என்று சொல்லும் ஷாலினி பாண்டே, தற்போது தனுசின் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார்.