தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை அகதிகளின் வலியைச் சொல்லும் ‘இரவுப்பறவை’

1 mins read
7194a7a8-dd90-417b-8535-47eb49cbade6
‘இரவுப்பறவை’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

அகதிகளாக வந்தவர்களில் ஒரு பெண் போராட்டம் நடத்தி, இந்திய குடியுரிமையைப் பெறுவதும் அதற்காக எதிர்கொள்ளும் வலியும் வேதனையும்தான் கதை.வேதாஜி பாண்டியன் கதை எழுதி, இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சத்யா, இலங்கையைச் சேர்ந்த நந்தினி, நிழல்கள் ரவி, ஆர்.பாண்டியன், செல்வகுமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆல்வின் கலைபாரதி பாடல்களை எழுதி, இசையமைத்துள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி உலகெங்கும் திரைகாண உள்ளது.

அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் இலங்கை அகதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை அடுத்து, சசிகுமார் நடிப்பில் உருவாகும் ‘பிரீடம்’ படமும் இலங்கை அகதிகளைப் பின்னணியாகக் கொண்டதுதான்.

குறிப்புச் சொற்கள்