சூர்யா படத்திலிருந்து இசைப்புயல் விலகல்

1 mins read
2e9203f1-393d-49f5-a27e-c760ddced4bc
சாய்ரா பானுவுடன் ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டது. அவருடைய திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டதால் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நடைபெறுவது என்பது இது முதன்முறையன்று. இதற்கு முன்னர் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘இந்தியன் 2’, ‘டீன்ஸ்’ ஆகிய படங்களில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகி பின்னர் விலகியது குறிப்பிடத்தக்கது.

அவர் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த படங்களை மட்டுமே முடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய படங்களைத் தற்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஏ.ஆர்.ரகுமான்