தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களரிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இஷா தல்வர்

1 mins read
39e9f32e-b1b6-40a2-8c04-e394f225205e
இஷா தல்வர். - படம்: ஊடகம்

நடிகை இஷா தல்வர் திடீரென களரிப் பயிற்சி பெற்று வருகிறார். எதற்காக இந்தப் பயிற்சி எனத் தெரியவில்லை.

ஏதேனும் புதுப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக களரி கற்கிறாரா என்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

கேரளாவில் உள்ள பிரபல களரிப் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகிறார் இஷா தல்வார்.

கடந்த 2012ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற இவர் இந்தி, தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

களரிப் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர, அவற்றைக் கண்டு ரசிகர்கள் பலர், ‘உங்களை இந்தக் கோலத்தில் பார்த்தால் புல்லரித்துப் போகிறது’ என்று பாராட்டி உள்ளனர்.

புதிய கலையைக் கற்பதில் இஷாவுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகமாம். அதற்காகத்தான் களரி பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்