தனது தந்தையின் புகழில் இருந்து விலகிச்செல்வது கடினமாக இருந்ததாக ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இல்லாத ஷ்ருதி என்பதை தான் கற்பனைகூட செய்ய விரும்பவில்லை என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் ஷ்ருதி.
“இரண்டு உறுதியான மனிதர்களால் நான் வளர்த்து ஆளாக்கப்பட்டேன். இந்த உறுதி எனது தந்தைக்கும் உள்ளது.
“அனைவரையும் பிரிந்து நான் மும்பைக்குச் சென்றேன். அனைத்து இடங்களிலும் அப்பாவின் சுவரொட்டியைப் பார்க்க முடிந்தது. எனவேதான் அவரது புகழில் இருந்து விலகிச் செல்வது கடினமாக இருந்தது எனச் சொல்கிறேன்,” என பேட்டியில் ஷ்ருதிஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.