நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். தற்போது அவர் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்துள்ளார்.
‘சிக்கந்தர்’ படம் வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சத்யராஜும் நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா, சல்மான் கானுடன் நடித்தது பற்றி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
“இந்திய திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவர் படத்தில் நடிப்பது பெருமை தருகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே ‘சிக்கந்தர்’ பட நாயகன் சல்மான் கானிடம் நாயகி உடனான வயது வித்தியாசம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சல்மான் “வயது வித்தியாசம் அதிகம் இல்லை. அவருக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் என்பது தெரியும். கதாநாயகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய அப்பாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார் அவர்.
“விரைவில் ராஷ்மிகா திருமணம் செய்து கொள்வார். அவர் ஒரு மகளுக்குத் தாயாகலாம். அவர் வளர்ந்ததும், அவருடனும் பணிபுரிவேன். ராஷ்மிகா அதை ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன்” என்று சல்மான் பதிலளித்தார்.