மூன்று நாள்களாக கைப்பேசி இல்லாமல் தனியாக வீட்டுக்குள் இருந்தது மிகவும் பயங்கரமான அனுபவம் என்று கூறியுள்ளார் சமந்தா.
சமூக வலைத்தளத்தில் மும்முரமாக இயங்கி வரும் சமந்தா அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மூன்று நாள்கள் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் அதை விட்டு விலகி இருந்தேன்.
“மூன்று நாள்களும் மௌனமாக இருந்தேன். கைப்பேசியைத் தொடவே இல்லை. யாருடனும் தொடர்புகொள்ளவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன்.
“நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷ்டமானது, பயங்கரமானது. ஆனால் இப்படி மௌனமாக இருப்பதை நான் விரும்புகிறேன். பல மில்லியன் தடவைகள் இப்படி தனியாக இருக்கும்படி சொன்னாலும் இருப்பேன். நீங்களும் இப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்,” என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்தப் பதிவை பலரும் பார்த்து வருகின்றனர்.