சுந்தர் சி இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள படத்துக்கு ‘கேங்கர்ஸ்’ என படக்குழு தலைப்பிட்டுள்ளது.
நகைச்சுவை நடிகராக தன் பயணத்தைத் தொடங்கிய நடிகர் வடிவேலுக்குத் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சிலகாலம்வரை நடிக்காமல் இருந்தவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் வித்தியாசமான முறையில் நடித்து அசத்தியிருந்த வடிவேலு, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களது கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘வின்னர்’, ‘கிரி’, ‘நகரம்’ ஆகிய படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
இதில் சுந்தர்.சி நாயகனாக நடித்திருந்தாலும் ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு.
அத்துடன், கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 90% வரை முடிவடைந்துவிட்டது. ‘கேங்கர்ஸ்’ எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை (செப்டம்பர் 12) வெளியாகி முதல் கட்ட சுவரொட்டியும் வெளியீடாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார் சுந்தர்.சி.

