ரஜினிக்குப் போட்டி: விஷாலைக் களமிறக்கும் சுந்தர்.சி

ரஜினிக்குப் போட்டி: விஷாலைக் களமிறக்கும் சுந்தர்.சி

படங்கள்: கலக்கல் சினிமா

04 Feb 2026 - 6:13 pm

1 mins read

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கயாது லோஹர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையைக் கேட்டு நடிக்க சம்மதித்த அவர், திடீரென கால்ஷீட் ஒதுக்க முடியாது எனக் கூறி விலகிவிட்டாராம். இதையடுத்து, தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் படமிது. வழக்கம்போல் அதிரடிச் சண்டைகள், காதல், நகைச்சுவை ஆகிய அம்சங்களுடன் கூடிய படமாக இதை உருவாக்கி வருகிறார் சுந்தர்.சி.

படப்பிடிப்பை விரைவில் முடித்து செப்டம்பர் முதல் வாரத்திலேயே திரைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் சுந்தர்.சி.யின் விருப்பமாம். இல்லையெனில் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படம் வெளியாகும் அதே நாளில் ‘புருஷன்’ படத்தையும் வெளியிடத் திட்டமிடுவதாகத் தகவல்.

ஆனால், ரஜினி, விஷால் இடையே போட்டி என்று விளம்பரப்படுத்துவது சரியாக வராது என்று விநியோகிப்பாளர்கள் தரப்பில் இப்போதே முணுமுணுப்பு தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ரஜினியின் 173வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சிக்கு கிடைத்தது. ஆனால், அவர் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அந்தக் கோபத்தில்தான் ‘புருஷன்’ படத்தை ‘ஜெயிலர்-2’ வெளியாகும் அதே சமயத்தில் களமிறக்கி அவர் தன் கோபத்தை வெளிப்படுத்த திட்டமிடுவதாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், இது எல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என சுந்தர்.சி தரப்பு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகர்திரைப்படம்இயக்குநர்வெளியீடு