‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) வெளியானது.
முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவார்கள் என்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தரப்பில் கூறப்படுகிறது.
கோவாதான் கதைக்களமாம். வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் நகைச்சுவையான காணொளியை வெளியிட்டு படம் குறித்து அறிவித்துள்ளனர்.
நெல்சனும் அனிருத்தும் இடம்பெற்றுள்ள இக்காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.