‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் முத்துவேல் பாண்டியன் மாயஜாலம்

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நிறைவு: மீண்டும் முத்துவேல் பாண்டியன் மாயஜாலம்

1 mins read
2fe8ebec-6e69-4c8b-b0a3-205dfd1d9257
ஜெயிலர் படக் காட்சி. - படம்: பிடி பிஸ்னஸ் டுடே
multi-img1 of 2
Google News Preferred Icon

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளவில் வசூலில் சாதனை படைத்த ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான முதல் பாகம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், முத்துவேல் பாண்டியனாக மீண்டும் ரஜினிகாந்த் அதிரடி காட்டவுள்ளார்.

சென்னை, ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்த படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் மின்னிலக்க, சாட்டிலைட் உரிமங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்