சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டு நாளை அப்படக்குழுவினர் ஒரு சிறு முன்னோட்டம் வாயிலாக அறிவித்துள்ளனர்.
படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக ஊடகங்கள் வழி அந்த முன்னோட்டத்தை வெளியிட்டது.
காணொளியின் இறுதியில் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், இவ்வாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.