சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரிச் சாலைக்கு, காலஞ்சென்ற பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் பெயர் சூட்டப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஜெய்சங்கர், கல்லூரிச் சாலையில்தான் பல ஆண்டுகள் வசித்து வந்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு அவர் காலமானார். இந்நிலையில், ஜெய்சங்கரின் வீடு இருந்த கல்லூரிச் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என அவரது மகன் மருத்துவர் விஜயசங்கர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நடிகர் விவேக் வீடு இருக்கும் விருகம்பாக்கம் சாலைக்கு அவரது பெயரும் சென்னை காந்தார் நகரில் பாடகர் எஸ்பிபி வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டன.