‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் மத்திய தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என்றும் இதில் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாகத் தெரிவதாகவும் பா.ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
மாற்றுக் குரல்களை ஒடுக்கும் வகையில் தணிக்கைத் துறை தவறான வழிகாட்டுதலில் இயங்குவதாகவும் இப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தணிக்கைத் துறை சுதந்திரமாகச் செயல்படவும், படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

