விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
தற்போது படத்தொகுப்பு, பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பட வெளியீட்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால், நிதானமாக வேலை பார்த்தால் போதும் என்று படக்குழுவிடம் கூறியுள்ளாராம் விஜய்.
இதனால் இயக்குநர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைவரும் உற்சாகமாகிவிட்டனர்.
ஒவ்வொரு காட்சியாக கச்சிதமாக தயார் செய்யுங்கள் எனக் கூறியுள்ள விஜய், படத்தின் முதல் பாடலைப் பிரம்மாண்டமாக விழா ஒன்றை நடத்தி வெளியிடலாமா என யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.