சுவரொட்டி சர்ச்சையில் ‘ஜனநாயகன்’

1 mins read
f6b6bc30-51f6-4918-857b-004f10087551
‘பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’, ‘ஜனநாயகன்’ திரைப்பட சுவரொட்டிகள். - படம்: சமூக ஊடகம்

எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய சுவரொட்டி ஒன்று வியாழக்கிழமை (நவம்பர் 6) வெளியானது.

அதில், கூட்டத்தினருக்கு மத்தியில் நிற்கும் விஜய்மீது சிலர் கை வைத்திருப்பதை அந்தச் சுவரொட்டி காட்டியது. இது, ஹாலிவுட் திரைப்படம் ஒன்றின் சுவரொட்டியை நகலெடுத்துள்ளதாக சர்ச்சை வெளியாகியுள்ளது.

2016ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தின் சுவரொட்டியை ‘ஜனநாயகன்’ படச் சுவரொட்டி நகலெடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தச் சுவரொட்டியை, எந்தத் திரைக்கதையை, எந்தப் பாடலை எங்கிருந்து நகலெடுத்தார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அப்படிப்பட்ட நிலையில், விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்தின் சுவரொட்டியை இப்படி நகலெடுத்திருப்பதால் கேள்விகள் எழுந்துள்ளன.

இனி வெளியாக உள்ள சுவரொட்டிகளிலாவது இயக்குனர் வினோத் சற்று கவனமாக இருக்கும்படி இணையவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்