’பாகுபலி’யை முந்திய ’ஜனநாயகன்’

1 mins read
473e8600-4c9e-4659-a895-3e0e98c1941e
‘தி ராஜா சாப்’, ‘ஜனநாயகன்’ படச் சுவரொட்டிகள். - படங்கள்: தினமலர்

தலைப்பைப் பார்த்த உடனேயே விவரம் புரிந்திருக்கும். தெலுங்கில் உச்சத்தில் உள்ள பிரபாசும், தமிழில் முன்னணி நாயகனாக உள்ள விஜய்க்கும் இடையே திடீர்ப் போட்டி ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’, பிரபாசின் ‘தி ராஜா சாப்’ ஆகிய இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

இதையொட்டி, இரு படங்களுக்குமான திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அப்பாடலின் தெலுங்குப் பதிப்பு யூடியூப் தளத்தில் 23 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ கடந்த வாரம் வெளியாகி 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றன. இது ‘தி ராஜா சாப்’ பாடலுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும்.

இதே போல் பிரபாஸ் படத்தின் இரண்டாவது பாடலான ‘சஹானா சஹானா’ பாடல் யூடியூபில் 12 மில்லியன் பாடல்களை மட்டுமே கடந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு தேரே வரலாறு’ பாடல் வெளியான முதல் நாளிலேயே 14 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதித்துள்ளது.

எனவே, போட்டியில் ‘ஜனநாயகன்’ நிச்சயமாக ‘பாகுபலி’யை வென்றுவிடுவார் என்று இப்போதே விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்