நேரடிப் போட்டியில் ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள்

நேரடிப் போட்டியில் ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள்

படங்கள்: இந்துஸ்தான் டைம்ஸ்

24 Dec 2025 - 1:44 pm

1 mins read

நடிகர் விஜய்யுடன் நேரடியாக திரையில் மோத உள்ளார் சிவகார்த்திகேயன்.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படமும் ஒரே நாளில் வெளியீடு காண உள்ளன.

முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி விஜய் படம் முதலில் வெளியாவதாக இருந்தது. பின்னர் ஜனவரி 14ஆம் தேதி ‘பராசக்தி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டுமே பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால் வீண் போட்டி, பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ‘பராசக்தி’ படம் முன்கூட்டியே வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்தன. அது உண்மை அல்ல என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

‘ஜனநாயகன்’ வெளியான மறுநாளே, அதாவது ஜனவரி 10ஆம் தேதி ‘பராசக்தி’ படமும் திரைகாண இருப்பதாக அதன் தயாரிப்புத் தரப்பான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் படத்துக்குப் போட்டியாக இப்படியொரு முடிவு சிவகார்த்திகேயன் எடுத்து இருக்கக்கூடாது என விஜய் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

‘ஜனநாயகன்’ படத்தை வினோத்தும் ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கராவும் இயக்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
விஜய்சிவகார்த்திகேயன்திரைப்படம்போட்டி