‘ஜனநாயகன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படத்துக்கான திரையரங்க டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை முன்பதிவின் மூலம் ரூபாய் நான்கு கோடி வசூல் கிடைத்திருப்பதாகத் தகவல்.
இது நல்ல துவக்கமாக இருப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், படம் வெளியாவதற்குள் முன்பதிவின் மூலம் மேலும் சில கோடி ரூபாய்கள் வசூலாகும் என்ற நம்பிக்கை உள்ளது என படத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜனநாயகன்’. நடிகர் விஜய் இதுவே தாம் நடிக்கும் கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார்.

