பொதுவாக நடிகைகள் திரையுலகில் முதலிடம் பெறவும், ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், அதிக சம்பளத்துக்கும்தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரோ, திருமணம் செய்துகொண்ட பிறகு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும் என விரும்புகிறாராம். அவரது இக்கருத்தைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
சித்தார்த் மல்கோத்ராவும் ஜான்வியும் இணைந்து நடித்த ‘பரம சுந்தரி’ படம் கடந்த 29ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில சுவாரசியமான தகவல்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
திருமணமான பிறகு மூன்று குழந்தைகளைப் பெற்று, வளர்க்க வேண்டும் என்பதே தனது ஆசை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏனென்றால் மூன்று எனது அதிர்ஷ்ட எண் ஆகும். என் இரண்டு குழந்தைகள் சண்டை போடும்போது மூன்றாவது குழந்தை அவர்களைச் சமாதானப்படுத்தும். இதனால் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு துணையும் ஆதரவும் கிடைக்கிறது,” என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.