தனது தங்கை குஷியை இளவரசி எனக் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
நடிகர் இப்ராகிம் அலி கானுடன் இணைந்து ‘நாதானியான்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர்.
கடந்த 7ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தன.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திர்கித் தூம்’ பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பாடலின் காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து, அதை தாம் பார்த்து ரசித்ததாகக் கூறியுள்ளார் குஷியின் மூத்த சகோதரி ஜான்வி.
“அந்தப் பாடலில் தங்கையைப் பார்த்தபோது அந்த அழகில் மயங்கிவிட்டேன். குஷி ஓர் இளவரசிபோல் அதில் காட்சியளித்தார்,” எனப் புகழ்ந்துள்ளார் ஜான்வி.