‘ஆர்ஆர்ஆர்’ படத்தை நூறு முறை பார்த்த ஜப்பான் ரசிகை

1 mins read
ce773381-7efd-4fdd-83a4-5507e0333d39
ராம்சரணுக்குப் பரிசு கொடுத்த ஜப்பான் ரசிகை. - படம்: இந்தியா டுடே

நடிகர் ராம்சரணின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை ஜப்பான் ரசிகை ஒருவர் நூறு முறை பார்த்து ரசித்துள்ளாராம்.

இந்நிலையில், அவர் அண்மையில் ஜப்பானிலிருந்து ஹைதராபாத்துக்கு பறந்து வந்து ராம்சரணை நேரில் சந்தித்துள்ளார்.

ராம்சரணுக்காக தாம் கொண்டு வந்த கைவினைப்பொருள்களை அவர் பரிசாக அளித்தார். அவற்றை வியப்புடன் பெற்றுக்கொண்ட ராம்சரணிடம் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தன்னைப்போல் மேலும் பல ஜப்பானிய ரசிகைகள் தொடர்ந்து பார்த்து ரசித்து வருவதாக அவர் கண்கலங்க கூறியபோது ராம்சரணும் சற்றே கலங்கிப்போனார்.

ராம்சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’, தற்போது அவர் நடித்து வரும் ‘பெத்தி’ ஆகிய படங்களையும் ஜப்பான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக இந்த ரசிகை மேலும் கூறியுள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு, அதில் நடித்த ஜூனியர் என்டிஆருக்கும் ஜப்பானில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இதேபோல் ‘பாகுபலி’ பிரபாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்