‘சிக்மா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

‘சிக்மா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

படம்: தினமலர்

19 Sep 2026 - 5:07 pm

1 mins read

‘சிக்மா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தாயாருக்கும் முதல்வரான தனது தந்தைக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத் தயாரிப்பில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு தேவை, பிரச்சினை இருக்கும்போது எடுக்கும் முடிவால் வாழ்க்கையே மாறிப்போகும்.

“அப்படிப்பட்ட பயணம்தான் இந்தச் ‘சிக்மா’ திரைப்படம். எனக்கு இது முதல் படம் என்பதால் மிகவும் சிறப்புமிக்கதாகவும் மறக்க முடியாததாகவும் அமைந்துள்ளது,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது நண்பர்கள், குடும்பத்தினர், அம்மா மற்றும் இன்றைக்கு முதல்வராக இருக்கும் என் அப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு அனைவரும் தமது பேராதரவைத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஹைதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேசன், “என் தந்தை எனது படத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளார்,” என்றார்.

தற்போது இத்திரைப்படத்தின் வெளியீட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் படம் வெளியான பின்னரே நடிப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்