சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஜேசன் சஞ்சய்

1 mins read
4b080e01-ed8c-4d62-b09d-50a10be24f8e
ஜேசன் சஞ்சய். - படம்: ஊடகம்

தந்தை அரசியல் களம் கண்டுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதுதான் அண்மையத் தகவல்.

கடந்த சில மாதங்களாக இப்படத்துக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஜேசன் சஞ்சய்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்