இயக்குநர் ஷங்கரின் மகனுக்கு ஜேசன் சஞ்சய் வாழ்த்து

இயக்குநர் ஷங்கரின் மகனுக்கு ஜேசன் சஞ்சய் வாழ்த்து

படம்: இந்து தமிழ்திசை

20 Jun 2026 - 1:07 pm

1 mins read

பிரபல இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘லவ்வர் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூசை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், பிக் பாஸ் ராஜு, ஜெயமோகன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்து படித்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்ற அர்ஜித் தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார்.

அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் இயக்கும் இப்படத்தை, பேஷன் ஸ்டுடியோஸ், கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விழாவில் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டு தமது நெருங்கிய நண்பரான அர்ஜித் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரைப்படம்திரைப்படத்துறை