தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தி திணிப்பு எதிர்ப்பு கதையில் சிவகார்த்திகேயன்

2 mins read
1aba927b-2de0-4c48-aba6-69287fb73aa2
ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, அதர்வா. - படம்: ஊடகம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்பு எதிர்ப்பு கதையில் நடிக்க இருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இருவரும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியது அதிகம் பாராட்டப்பட்டது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.

 இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய கதை கொண்ட இப்படத்தின் அறிவிப்பில், ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரை வைத்து இப்படத்தை உருவாக்க இருக்கின்றார் சுதா கொங்காரா. சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கின்றார் என்ற தகவல் தான் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

தொடர்ந்து முன்னணி நாயகனாக பல படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி மற்றொரு நாயகனின் படத்தில் நடிக்கின்றார் என்றால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான ஒரு வேடம் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்பட்டது. அதைப்போல அதர்வாவும் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.

SK25 படத்தின் பூஜையின்போது வைக்கப்பட்ட சுவரொட்டியில் ஜெயம் ரவியின் பெயர் தான் முதலில் இருந்தது. அதன் பிறகுதான் சிவகார்த்திகேயனின் பெயரும் அதர்வாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது பூஜைக்கு வந்திருந்த பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கின்றது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்