ஓடிடியில் வெளியாகும் 'அகிலன்'

ஓடிடியில் வெளியாகும் 'அகிலன்'

1 mins read
db470d7a-14b7-472c-979f-f9f7dbcad16d
மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் 'அகிலன்' வெளியானது. படம்: இணையம் -
Google News Preferred Icon

ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் திரைப்படமான 'அகிலன்' மார்ச் 31ஆம் தேதி 'ஜீ5' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்து பேசிய அத்திரைப்பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன், "ஜெயம் ரவி சார் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் சேர்ந்து பணியாறியது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஓடிடியில் 'அகிலன்' வெளியாவதன் மூலம், ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தைக் கண்டுகளிக்கலாம்," என்று கூறினார்.

மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் 'அகிலன்' வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் வாரத்தில், உள்நாட்டில் ரூ.10 கோடி வசூலிக்கப்பட்டது.