நடிகர் ஜெயம் ரவி அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
கௌதம் மேனன் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியானது. அந்தப் படத்தில்தான் ஜெயம் ரவி தற்போது சிம்புவுக்குப் பதிலாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சிம்புவுக்கும் ஊதிய விவகாரம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது அந்த நிறுவனம்தான் கௌதம் மேனன் இயக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளதாம்.
இத்தகவலை அறிந்த பிறகே தம்மால் நடிக்க இயலாது என சிம்பு ஒதுங்கி இருக்கிறார். இதையடுத்து, கௌதமும் ஜெயம் ரவியும் முதல்முறையாக இணைந்துள்ளனர்.