ராஜேஷ் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘பிரதர்’ படத்தை விளம்பரம் செய்து வருகிறார் ஜெயம் ரவி.
தீபாவளி பண்டிகை சிறப்புப் படமாக அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் ‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.
அக்கா, தம்பி இடையேயான பாசத்தை கொண்டாடும் ‘பிரதர்’ படத்தை குடும்பத்தினர் நிச்சயம் கொண்டாடி வெற்றிப்படம் ஆக்குவார்கள் என நம்பப்படுகிறது.
இப்படம் தொடர்பாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார் ரவி. அந்த பேட்டிகளில் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பேசுகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதனால் இந்த அளவுக்கு பக்குவமாக பேச முடியுமா என வியக்க வைக்கிறார் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
மகிழ்ச்சியாக இருந்தால் ஒரு நாள் அதை அனுபவித்துவிட்டு மறுநாள் வேலைக்கு போய்விட வேண்டும். அதைப்போல கவலையாக இருந்தாலும் ஒரு நாள் அமைதியாக இருந்துவிட்டு மறுநாள் வேலைக்கு சென்றுவிட வேண்டும் என ஜெயம் ரவி கூறியிருப்பது அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
வெற்றியை அதிகமாகக் கொண்டாடுவது தவறு. அதைத் தலைக்கு ஏற்றிக் கொள்ளக் கூடாது என்கிறார் ஜெயம் ரவி.
‘இந்த ‘பிரதர்’ இவ்வளவு அழகாக பேசுகிறார். பொறுமைசாலியாக வேறு தெரிகிறார். அப்படி இருக்கும்போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பிரச்சினை வந்தது எப்படி?’ என வியக்கிறார்கள் ரசிகர்கள் .