ரிஷப் செட்டி இயக்கி, நடித்து வரும் ‘காந்தாரா 2’ படத்தில் நடக்க ஒப்பந்தம் ஆகியிருந்த மோகன்லாலுக்குப் பதில் ஜெயராம் நடிக்க இருக்கிறார்.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த ‘காந்தாரா’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி, ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில், இதில் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான மோகன்லால் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்பொழுது மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்து விட்டன. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.