இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘ஜியோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜீவா பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய விளம்பரக் காணொளி ஒன்றைப் படக்குழு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) வெளியிட்டுள்ளது.
‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ எனத் தலைப்பிட்டு, அதனைச் சுருக்கி ‘ஜியோ’ என்று அழைத்து வருகிறது படக்குழு.
மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
விரைவில் படத்தின் ‘ஃபர்ஸ்ட்லுக்’ படங்களை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இதர படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தகட்டமாக விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘ஜியோ’ படத்தில் ஜீவாவுடன் நடித்து வரும் நடிகர்கள் யார் என்பதைப் படக்குழு வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
’சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு ஜீவா, ராஜேஷ், யுவன் மூவரும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

