தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பு நிறைந்த அற்புதமான பெண் ஜோதிகா: நிமிஷாவின் நெகிழ்ச்சியான பதிவு

2 mins read
3220fc6a-d5fd-4794-b1f6-82e3ad1e8255
‘டப்பா கார்டெல்’ இணையத் தொடர். - படம்: ஊடகம்

‘டப்பா கார்டெல்’ இணையத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகும் முன்பே அதுகுறித்து ரசிகர்கள் அதிகம் பேசத் தொடங்கிவிட்டனர்.

தற்போது இத்தொடர் வெளியாகிவிட்ட நிலையில், அதில் நடித்துள்ள

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, ஷபானா ஆஸ்மி ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிகின்றனவாம்.

இந்நிலையில், ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சிப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ஜோதிகாவை ‘எனது அருமை சகோதரி’ (மை டியர் ஜோ சேச்சி) என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் சந்தித்ததில் மிகவும் கனிவான, அன்பு நிறைந்த அற்புதமான பெண் நீங்கள். `டப்பா கார்டெல்’ பயணம் முழுவதும் நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறவேண்டும்.

“இத்தொடரில் என்னுடைய மாலா கதாபாத்திரத்திற்கு வருணா மேடமாக நீங்கள் இருந்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் சிறந்தவர். என் இதயத்தில் எப்போதும் ஒரு சிறப்பான இடம் உங்களுக்கு இருக்கும்,” என்று தனது பதிவில் பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார் நிமிஷா சஜயன்.

இவர் மலையாளத்தில் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநிலத் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது ஆகியவற்றை ஒருமுறையும், மூன்று முறை சைமா விருதையும் பெற்றவர்.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘மிஷன்: அத்தியாயம் 1 - அச்சம் என்பது இல்லையே’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.

நிமிஷாவின் பதிவுக்குப் பின்னூட்டமிட்டுள்ள ஜோதிகாவும் தன் பங்குக்கு, ஒரு நடிகையாகவும் நல்ல பெண்ணாகவும் அவரை நேசிப்பதாகக் கூறியுள்ளார்.

“நாம் இருவரும் ஒன்றாக அழகான, உணர்வுபூர்வமான ஒரு காட்சியில் நடித்தது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்குத் தெரியுமா, நான் உங்களின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் அத்தனை படைப்புகளுக்கும் மிகப்பெரிய ரசிகை,” என்றும் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார் ஜோதிகா.

குறிப்புச் சொற்கள்